தவிட்டுப்பட்டி தொல்லியல் களம்

    அமைவிடம் - தவிட்டுப்பட்டி தொல்லியல் களம்
    ஊர் - தவிட்டுப்பட்டி
    வட்டம் - துறையூர்
    மாவட்டம் - திருச்சி
    வகை - பெருங்கற்காலம்
    கிடைத்த தொல்பொருட்கள் - உடைந்த பானையோடுகள், கல்மணிகள், உடைந்த தந்த வளையல்கள், கருப்பு-சிவப்பு பானையோடுகள், கற்கோடரிகள்
    பண்பாட்டுக் காலம் - பெருங்கற்காலம்
    விளக்கம் -

    தவிட்டுப்பட்டி தொல்லியல் களம் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தொல்லியல் எச்சங்களை உடையதாக காணப்படுகின்றது. அதனினும் நுண்கற்காலக் கருவிகளின் உடைந்த செதில்கள் மற்றும் கற்கோடரிகள் ஆகியனவும் இங்கு மேற்பரப்பில் காணக்கிடைக்கின்றன. உடைந்த கருப்பு-சிவப்பு பானையோடுகள், சிவப்பு கல்மணிகள், குவார்ட்ஸ் பளிங்கு கற்களாலான நுண்கருவிகள், கற்கோடரிகள் ஆகியன மேற்பரப்பு களஆய்வில் கண்டறியப்பட்டுள்ளன.

    ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் - திரு.பெரியசாமி ஆறுமுகம்